கலப்படமறிய
உணவு பொருட்களில் கலப்படத்தையறிய: 1.உணவுப் பொருளின் பெயர் : நெய் அல்லது வெண்ணெய் கலப்படப்பொருள் : வனஸ்பதி கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு சோதனைக் குழாயில் ஒரு தேக்கரண்டி உருகிய நெய் அல்லது வெண்ணெய் மற்றும் அதே அளவுக்கு அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அக்கலவையில் ஒரு சிட்டிகை சர்க்கரையைச் சேர்த்து ஒரு நிமிட நேரம் நன்கு குலுக்கவும். பின்னர் ஐந்து நிமிட நேரம் அப்படியே வைத்திருக்கவும். சோதனைக் குழாயின் அடியில் ஊதாநிறம் அல்லது கருஞ்சிவப்பு நிற அமிலப் படிவு காணப்பட்டால் அதில் வனஸ்பதி கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணரலாம். முன் எச்சரிக்கை : வனஸ்பதி பொருள் கட்டாயமாக நல்லெண்ணெய் கலக்கப்பட வேண்டும் என்பதை கண்டறிய இச்சோதனை மிகவும் ஏற்றது. சில நிலக்கரி தார் சாயங்களும் இச்சோதனைக்கு இதே முடிவைத்தரும். கலப்படப்பொருள் : கூழாக்கப்பட்ட உருளைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு மற்றும் பிற மாவு வகைகள். கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : வெண்ணெயில் உருளைக்கிழங்கு அல்லது வள்ளிக் கிழங்கின் கூழ் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் ...